• 11 years ago
இந்தியாவிலுள்ள சிறப்பு வாய்ந்த நான்கு மலை தொடருந்து பாதைகளுள் நீலகிரி மலை தொடருந்து பாதையும் ஒன்றாகும். (சிம்லா மலைப்பாதை, டார்ஜிலிங் மலைப்பாதை, மாதேரன் மலைப்பாதை ஆகியவை மற்ற மூன்றாகும்).

உதகமண்டலத்திற்கும் மேட்டுப்பாளையத்திற்கும் இடையே 46 கி.மீ செல்லும் இந்த தொடருந்துப் பாதை இந்தியாவின் ஒரே பற்சட்ட இருப்புப்பாதை(rack railway) ஆகும்.

இந்தியாவின் பழமை வாய்ந்த மலை தொடருந்துப் பாதைகளில் நீலகிரி மலை தொடருந்துப் பாதையும் ஒன்றாகும். 1899-ல் திறக்கப்பட்ட இப்பாதை ஆரம்பத்தில் மதராஸ் இரயில்வே நிறுவனத்தால் இயக்கப்பட்டது. உலகில் 'நீராவி இயக்கி' பயன்படுத்தும் தொடருந்துகளில் இதுவும் ஒன்று.

இப்பாதை 1995-ல் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலக பாரம்பரியக் களமாக (World Heritage Site) ஆக அறிவிக்கப்பட்டது.

Category

🏖
Travel

Recommended