ரூபா சொன்னதும் நடந்திருக்கும் போல.. சிறையில் சசிக்கு தனி "கிச்சன்"!- வீடியோ

  • 7 years ago
பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு தனி சமையலறை இருந்ததும் பல சலுகைகள் வழங்கப்பட்டதும் உண்மை என்று கர்நாடக அரசின் சார்பில் அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் தனது அறிக்கையை சமர்ப்பித்தது.
சொத்துக் குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கடந்த ஜூலை 11-ஆம் தேதி சசிகலாவுக்கு சிறப்பு சமையல் கூடம், 5 அறைகள், பார்வையாளர்களை சந்திக்க தனி அறை உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டதாக அங்கு ஆய்வு நடத்திய சிறை துறை டிஐஜியாக இருந்த ரூபா குற்றம்சாட்டினார்.இந்த சலுகைகளை சசிகலாவுக்கு வழங்குவதற்காக சிறை துறை ஏடிஜிபி சத்தியநாராயணா ரூ. 2 கோடியை லஞ்சமாக பெற்றார் என்றும் அவர் புகார் தெரிவித்திருந்தார். இதையடுத்து சசிகலாவும், இளவரசியும் சிறையிலிருந்து ஹாயாக ஷாப்பிங் செல்லும் வீடியோவும் வெளியானது.

இதையடுத்து இந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் விசாரணை கமிஷனை அமைத்தது மாநில அரசு. இதையடுத்து வினய்குமார் சிறைக்கு ஆய்வு நடத்தினார். மேலும் ரூபா கொடுத்த ஆதாரங்களை ஆய்வு செய்த அவர் ரூபாவிடமும், சத்திய நாராயணாவிடமும் விசாரணை நடத்தினார்.அறிக்கையை ஒரு வாரத்துக்குள் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. ஆயினும் கால அவகாசம் கேட்கப்பட்டு 4 மாதங்களுக்கு பிறகே இந்த அறிக்கை வினய்குமார் கர்நாடக அரசிடம் தாக்கல் செய்தார்.

Retired IAS officer Vinay kumarsubmitted his report to government that Sasikala got special treatment in Parappana Agrahara prison is true. But there is no evidence against for ADGP Satyanarayana in the jail bribery vase.

Recommended