மோடி தான் இப்போதும் நெம்பர் 1...கருத்துக்கணிப்பில் தகவல்- வீடியோ

  • 7 years ago
மக்கள் மத்தியில் பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க.,வின் செல்வாக்கு அதிகரித்து வருவதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்று தெரிவித்து உள்ளது. அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் (Pew) என்கிற அமைப்பு ஊடக கருத்துக்கணிப்பில் மிகவும் புகழ்பெற்றது.

இந்நிலையில், சமீபத்தில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய மக்களிடையே செல்வாக்குப் பெற்ற தலைவராக பிரதமர் மோடி இருக்கிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் ஒரு சில மாநிலங்களைத் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் மொத்தம் 2464 பேரிடம் எடுக்கப்பட்ட இந்தக் கருத்துக்கணிப்பில், 88% மக்கள் மோடிக்கு ஆதரவாக ஓட்டளித்து இருக்கிறார்கள். இவரை விட 30% பின் தங்கி 58% ஓட்டுகளைப் பெற்று இருக்கிறார் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி.


Prime Minister Narendra Modi still tops the charts of popular political personalities of India. Pew released the findings after conducting a survey among 2,464 respondents all over India

Recommended