• 7 years ago
ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு தமிழ் சினிமாவிலிருந்து கிட்டத்தட்ட ரூ 55 லட்சத்துக்கும் அதிகமாக நிதி வழங்கியுள்ளனர் நடிகர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள். ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் தமிழுக்கென்று ஒரு துறையை உருவாக்கி, மாணவர்களின் ஆய்வுக்கு உதவ வேண்டும் என்பது உலகத் தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கை. இதற்காக கடந்த ஆண்டிலிருந்து தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி அதன் மூலம் திரட்டினர். தமிழ் சினிமாவிலிருந்து அதற்காக முதலில் குரல் கொடுத்தவர் மறைந்த கவிஞர் நா முத்துக்குமார். கடந்த ஆண்டு டல்லாஸ், சியாட்டல், ஆஸ்டின் நகரங்களில் நடந்த தமிழ் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், பின்னர் ஹார்வர்டு தமிழ் இருக்கை நிதி அளிப்பு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு, அதற்கான முயற்சிகளை ஊக்குவித்தார்.

Here is the list of fund givers for setting Tamil chair in Harvard University Tamil Chair.

Category

🗞
News

Recommended