சிறப்பான பந்து வீச்சையடுத்து, பேட்டிங்கிலும் இலங்கை டாப்..வீடியோ

  • 7 years ago
போகிற போக்கை பார்த்தால் முதல் இன்னிங்சில் இலங்கை அணி அதிகப்படியான ரன்கள் முன்னிலை வகித்துவிடும் என்ற கிலியில் உள்ளனர் இந்திய ரசிகர்கள். மழையால் அடிக்கடி தடை பட்ட கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் இந்தியா 172 ரன்களில் ஆல்-அவுட்டானது. ஆறுதலாக புஜாரா மட்டுமே அரை சதம் விளாசினார். கோஹ்லி டக்அவுட்டானார். மற்ற முன்னணி வீரர்களும் ஏமாற்றினர். பின்வரிசை பேட்ஸ்மேன்கள் சிறிது ரன் சேர்த்து மானம் காத்தனர்.

பிட்சில் ஈரப்பதம் அதிகம் இருந்ததால் பந்து அதிக அளவுக்கு ஸ்விங் ஆனதுதான் பேட்ஸ்மேன்களால் ரன் குவிக்க முடியாததற்கு காரணம். ஆனால் இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் அதிரடியாக ஆடி வருகிறது.
3வது நாளான இன்றைய ஆட்ட நேர முடிவில், இலங்கை அணி 45.4 ஓவர்களில் 165 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இது ஓரளவுக்கு நல்ல ரன் ரேட்தான். லகிரு திருமனே மற்றும் ஏஞ்சலோ மேத்யூஸ் தலா அரை சதம் அடித்து அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்தனர்.

Srilanka got good start in their first innings, as India all out for 172 runs

Recommended