• 7 years ago
அத்தனை டிபார்ட்மெண்ட்டும் முழு வீரியத்துடன் அர்ப்பணிப்புடன் சக்திக்கு மீறிய உழைப்பைத் தந்த ஒரு தமிழ்ப் படத்தைப் பார்த்து நாளாச்சு என்கிற ஏக்கத்தைத் தீர்த்திருக்கிறது.. தீரன் - அதிகாரம் 1. சதுரங்க வேட்டையாடிய இயக்குநர் ஹெச். வினோத் இந்தப் படத்தின் கதைக்காக பி.ஹெச்.டி வாங்குமளவிற்கு ஆராய்ச்சிகள் நடத்தியிருப்பது படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. புற நகரில் தனியாக இருக்கும் வீடுகளில் கொள்ளையர்கள் நுழைந்து தாக்கி கொள்ளையடித்துச் செல்லும் சம்பவங்களைப் பற்றி தினசரியும் படித்தும், பார்த்தும் கடக்கும் நமக்கு அதன் பின்னணியில் இயங்கும் மிகப் பெரிய நுட்பமான நெட் வொர்க்கையும், இரக்கமற்ற அந்த மனிதர்களையும் அறிமுகம் செய்வதோடு.. அவர்கள் யார், எப்படிப்பட்டவர்கள், ஏன் இப்படி இருக்கிறார்கள் என்கிற அவர்களின் வரலாற்றின் பின்னணியையும் பள்ளிக் குழந்தைக்கும் புரியும்படி படம் போட்டு பாகம் குறித்து விளக்கியிருக்கிறார்கள். மிகவும் அடர்த்தியான சப்ஜெக்ட்டை அந்த அடர்த்தி குறையாமல் திரைக்கதை அமைத்து.. சின்ன சின்ன புத்திசாலித்தனமான காட்சிகளில் நம்மை அந்த வரலாற்றை ஜீரணம் செய்யவைத்து படத்தோடு பயணிக்கச் செய்திருப்பது சல்யூட் அடிக்க வேண்டிய இயக்க வித்தை. தமிழக காவல்துறைக்கு ஒரு பெரிய சல்யூட் வைக்கத் தோன்றுகிறது. சாதனையாளர்களுக்கு உரிய மரியாதை உயரதிகாரங்களில் இருப்பவர்களால் கொடுக்கப்படாத அசிங்கமான நிதர்சனத்திற்காக சம்மந்தப்பட்டவர்களுக்கு ஒரு குட்டு வைக்கவும் தோன்றுகிறது.


Writer Pattukottai Prabhakar has praised Karthi's Theeran Athikaram Ondru Movie

Recommended