நல்லெண்ணத் தூதர்.. அடுத்து 'தலைவி' த்ரிஷாவா? - பதில் சொல்கிறார் த்ரிஷா- வீடியோ
- 7 years ago
சமூக சேவை பணிகளில் ஈடுபடுவதால், அரசியலுக்கு வரப்போகிறேன் என்று நினைக்கக்கூடாது என நடிகை த்ரிஷா கோரிக்கை வைத்துள்ளார். யுனிசெஃப் அமைப்பின் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலத்திற்கான நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள த்ரிஷா நேற்று அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகு நிருபர்களிடம் பேசினார். சினிமா பற்றியும், குழந்தைகளுக்கான கல்வி பற்றியும் பேசிய த்ரிஷா, சமூக சேவையில் ஈடுபட்டுவருவதால் அரசியலுக்கு வரப்போகிறேன் என நினைக்கவேண்டாம் எனக் கூறியுள்ளார்.
எனக்குக் கொடுக்கப்பட்டுள்ள யுனிசெஃப் தூதர் பதவியைப் பெருமையாகக் கருதுகிறேன். சினிமா எனக்கு நிறைய கொடுத்து இருக்கிறது. பதிலுக்கு இந்த சமூகத்துக்கு பணி செய்வதற்காகவே இந்தப் பொறுப்பை ஏற்றுள்ளேன். குழந்தைகள் கல்வி, நல்வாழ்வு, ஊட்டச்சத்து மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழ்நாடு மற்றும் கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன்.
ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத, திறந்தவெளி மலம் கழித்தலற்ற தமிழகம் உருவாக்கும் முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிப்பேன். 18 வயது வரை அனைத்து பெண் குழந்தைகளுக்கும் கல்வி அளிக்க வேண்டும். குழந்தை திருமணங்களை, குழந்தை தொழிலாளர்கள் முறைகளை தடுக்க பிரசாரம் செய்வேன்.
Actress Trisha has been appointed as UNICEF's Goodwill Ambassador for Tamil Nadu and Kerala. Trisha has requested, 'Not to think of me going to politics because I am engaged in social service work'.