அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவாங்காவுக்கு தெலுங்கானா மாநில அரசு சார்பில் சமந்தா சிறப்பு அன்பளிப்பு அளித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் இவாங்கா இரண்டு நாள் பயணமாக ஹைதராபாத் வந்தார். ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர் அங்குள்ள கொல்கொண்டா கோட்டையை சுற்றிப் பார்த்தார். இவாங்காவுக்கு சிறப்பு அன்பளிப்பு அளிக்க நடிகை சமந்தா முடிவு செய்தார். தெலங்கானா மாநில கைவினை பொருட்கள் விளம்பர தூதராக உள்ள நடிகை சமந்தா இவாங்காவுக்கு கோல்லம்பமா சேலையை தேர்வு செய்தார். கைத்தறியில் நெய்யப்பட்ட அந்த சேலை இவாங்காவிடம் அளிக்கப்பட்டது. தெலுங்கானா அரசு சார்பில் இவாங்காவுக்கு அளிக்கப்பட்ட பரிசுகளுடன் இந்த சேலையும் கொடுக்கப்பட்டது. சேலை இவாங்கா அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்கிறார்.
Actress Samantha has gifted Gollabhama Saree to the Ivanka Trump who was in Hyderabad on a two day visit. It is noted that Samantha is the brand Ambassador for Telangana Handicrafts.
Actress Samantha has gifted Gollabhama Saree to the Ivanka Trump who was in Hyderabad on a two day visit. It is noted that Samantha is the brand Ambassador for Telangana Handicrafts.
Category
🗞
News