ஆர்.கே.நகர் மக்களுக்கு ஸ்கூட்டர் கிடைக்கும்?- வீடியோ

  • 7 years ago
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனுக்கு வாக்களித்தால் ஸ்கூட்டர் வழங்கப்படும் என்று அமைச்சர் சரோஜா வாக்காளர்களிடம் உறுதிஅளிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. மேலும் ஆர்கே நகர் தொகுதியில் வாக்களர்களுக்கு ஸ்கூட்டர் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி அதிமுகவின் இரும்புக் கோட்டை என்று ஆளும் கட்சியினரால் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது. எனினும் இந்த இடைத்தேர்தல் ஆளும் கட்சிக்கு ஒரு சவாலானதாகவே இருக்கிறது. எப்போதுமே ஆளும்கட்சிக்கு போட்டியாக எதிர்க்கட்சி மட்டுமே இருக்கும் ஆனால் இந்தத் தேர்தலில் அதிமுகவில் இருந்து கழட்டிவிடப்பட்டு டிடிவி. தினகரன் அதிமுகவை எதிர்த்து நிற்கிறார். தொகுதியிலும் அவருக்கு செல்வாக்கு இருப்பதாகவே உளவுத்துறை ரிப்போர்ட்டுகளும் கூறுகின்றன.

கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிமுக வேட்பாளராக இருந்த போது தினகரன் வெளியிட்டிருந்த தேர்தல் அறிக்கை இப்போது வேலை செய்வதாக தெரிகிறது. வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டித் தரப்படும் என்று தினகரன் அந்த தேர்தல் வாக்குறுதியில் கூறி இருந்தார். இதை முன்வைத்து தான் தற்போது தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் அதிமுக சட்டமன்ற தேர்தல்களில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று வாக்கு சேகரித்து வருகின்றனர் ஆளும் கட்சியினர். தாலிக்குத் தங்கம், பட்டதாரி பெண்களுக்குத் திருமண நிதியுதவிகள் செய்யப்படும் என்று வாக்காளர்களிடம் உறுதியளிக்கப்படுகிறது.




Minister Saroja assured to RK Nagar constituency people that after by elections RK Nagar people will get Jaya's announcement of scooter for working women on subsidised rate.

Recommended