ஆஸ்கார் விருது பட்டியலில் இடம்பெறாத இந்திய படம்..!!- வீடியோ

  • 7 years ago
ஆஸ்கர் விருது கமிட்டி இறுதிச் சுற்றுக்கு தேர்வு செய்திருக்கும் 9 படங்கள் பட்டியலில் 'நியூட்டன்' படம் இடம்பெறவில்லை. ஆஸ்கர் விருது போட்டியிலிருந்து வெளியேறி இருக்கிறது 'நியூட்டன்'.

நடைபெற இருக்கும் ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்தியா சார்பில் தேர்வு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்ட இந்தி படம் 'நியூட்டன்'.

கடந்த செப்டம்பர் மாதம் வெளியான இந்தப் படத்தை அமித் வி.மசூர்கர் இயக்கி இருந்தார். இந்திய அளவில் அதிகம் பாராட்டுகளை பெற்றிருந்தது இந்தப் படம். 'நியூட்டன்' படத்தில் ராஜ்குமார் ராவ், பங்கஜ் திரிபாதி, அஞ்சலி பாட்டில், ரகுபிந்தர் யாதவ் நடித்திருந்தனர். த்ரிஷ்யம் பிலிம்ஸ் சார்பில் மனீஷ் முந்த்ரா தயாரித்திருந்தார். இந்தப் படம் நக்சலைட் அச்சுறுத்தல் மிகுந்த சத்தீஸ்கரின் ஒரு கிராமத்திற்கு தேர்தல் அதிகாரியாகச் செல்லும் ஒரு இளைஞன் சந்திக்கும் பிரச்னைகள் பற்றிய படம். இந்தப்படம் ஆஸ்கரில் வெளிநாட்டு படங்கள் பிரிவில் போட்டியிட இந்தியா சார்பில் தேர்ந்தெடுத்து அனுப்பி வைக்கப்பட்டது. எல்லோரும் எதிர்பார்த்த 'பாகுபலி - 2' பின்னுக்கு தள்ளப்பட்டது. நியூட்டன் உள்பட 80க்கும் மேற்பட்ட உலகப் படங்கள் இந்தப் பிரிவிற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

'Newton' is a film about the problems faced by a young man who goes to the village as an election officer. The film was selected on behalf of India to compete in the foreign films section of Oscar. 'Newton' is not on the list of the Oscar nominations for the final round. 'Newton' film, out from Oscar competition.

Category

🗞
News

Recommended