• 7 years ago
பெனாசிர் பூட்டோ கொல்லப்படுவதற்கு முன்பே பாகிஸ்தான் பாதுகாப்பு துறைக்கு அந்த விஷயம் தெரிந்து இருக்கிறது. மேலும் அவர் எப்போது கொல்லப்படுவார், என்ன மாதிரியான திட்டங்கள் தீட்டப்பட்டு இருக்கின்றது என்றும் அவர்களுக்கு தெரிந்துள்ளது. இந்த விஷயங்கள் அனைத்தும் தெரிந்தும் பாகிஸ்தான் பாதுகாப்பு துறை எதுவும் செய்யாமல் அமைதி காத்து இருக்கிறது. இதுகுறித்து எந்த விதமான எச்சரிக்கையும் பெனாசீர் பூட்டோவிற்கு அளிக்கப்படவில்லை. சரியாக அவர் இறந்து பத்து வருடங்களுக்கு பின் தற்போது இந்த உண்மை வெளியே வந்து இருக்கிறது. பாகிஸ்தான் அரசின் அலட்சிய போக்கு குறித்து உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகிறது.

பாகிஸ்தான் மக்கள் கட்சியின் முக்கிய தலைவராக இருந்தவர் பெனாசீர் பூட்டோ. இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதி தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் ராவல்பெண்டியில் தீவிர பிரச்சாரம் செய்து கொண்டு இருந்த போது துப்பாக்கியால் சுடப்பட்டார். இந்த சம்பவம் வீடியோவாக பதிவாகி வெளியானது.

Category

🗞
News

Recommended