ரஜினியின் அரசியல் வருகையால் குஷியாகிப்போன ஆளும் கட்சியினர்- வீடியோ

  • 7 years ago
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்க உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், இதனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்புதான் மிகுந்த குஷியாக உள்ளதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த் புயல் தமிழகத்தில் வீசத் தொடங்கியுள்ளதால், பல வகைகளிலும் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு நன்மையே ஏற்படப்போகிறது. ஆர்.கே.நகரில் ஒருவேளை தினகரன் தோல்வியுற்றிருந்தால், எடப்பாடி பழனிச்சாமி தரப்பு இப்போது ரஜினி வருகையை நினைத்து மகிழ்ந்திருக்க தேவையிருந்திருக்காது. ஆனால், எப்போது தங்களுக்கு தேவையோ அப்போது ஆபத்பாண்டவராக வந்துள்ளார் ரஜினி என நினைக்கிறது ஆளும் தரப்பு.

ஆம்.. ஆர்.கே. நகர் வெற்றிக்குப் பின் டிடிவி தினகரனுக்கு அதிமுகவினரிடையே பெரும் ஆதரவு பெருக ஆரம்பித்தது. அதிமுக கட்சியை கூட கைப்பற்றும் அளவுக்கு கீழ்மட்ட நிர்வாகிகள் அவருக்கு ஆதரவாக திரண்டு வந்தனர். இந் நிலையில் ரஜினியின் வருகை தேர்தல் களத்தில் தினகரனை பின்னுக்குத் தள்ளிவிட்டது. ஊடகங்கள் எல்லாமே தினகரனை பேசி வந்த நிலையில், இப்போது, ரஜினிகாந்த் பேசுபொருளாகியுள்ளார்.

After actor Rajinikanth has announced that a political party is going to be launched, the TN Chief Minister Edappadi Palanisamy is said to be a very happy person. The AIADMK believes that the BJP will maintain its rule until Rajinikanth is politically ready to build a strong party.

Recommended