• 6 years ago
என்னதான் உலகின் சிறந்த பொருள் நம் கையில் இருந்தாலும், பக்கத்தில் வேறு கவர்ச்சியான பொருள் இருந்தால்... நம் கையில் இருக்கும் பொருளின் மதிப்பை மறந்து வேறு பொருள்கள் மீது நாட்டம் செலுத்துவது மனிதர்களின் இயல்பு. இது சாதாரண உடை, உணவுகளில் இருந்து வாழ்க்கை துணை வர அனைத்திற்கும் பொருந்தும். மனைவியை ஏமாற்றிய கணவன் என்ற செய்தி வெளிவாராத நாளே இல்லை. இது போன்ற சூழல்களை நட்சத்திர தம்பதிகளும் தாண்டி வந்துள்ளனர். இதனால் விவாகரத்து பெற்ற ஸ்டார் தம்பதிகளும் இருக்கிறார்கள். சில சமயங்களில் கல்லானாலும் கணவன் என கற்பிக்கப்பட்டு வளர்ந்த பெண்கள் சிலர், அவர்களுக்கு மறு வாய்ப்பு அளித்து மன்னித்து ஏற்ற சம்பவங்களும் நடந்துள்ளன. உண்மையில் கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்ற பழமொழியின் அர்த்தமே வேறு, கல் போன்ற கடினமானவனாக இருந்தாலும், புள் போன்று மென்மையானவராக இருந்தாலும் கணவன், கணவன் தான் என்பதே இதன் உண்மை பொருள் என அறியப்படுகிறது. சரி! இனி, துரோகம் செய்த கணவனை மன்னித்து ஏற்றுக் கொண்ட நட்சத்திரங்களின் மனைவியர் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்...

Many bollywood actors had extra marital affair and yet their wives forgave the and they are still living happily even after all the allegations.

Category

🗞
News

Recommended