ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டாலின் வெளிநடப்பு- வீடியோ

  • 7 years ago
சட்டசபையில் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்ததாக ஸ்டாலின் கூறியுள்ளார். 2018 ஆம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியுள்ளது. தமிழ்தாய் வாழ்த்து முடிந்த உடனே ஸ்டாலின் பேச வாய்ப்பு கேட்டார். அப்போது மறுக்கப்பட்டது. ஆளுநர் பேச தொடங்கிய உடன் திமுகவினர் முழக்கமிட்டனர். அப்போது ஆளுநர் உட்காருங்க என்று கூறினார். ஆனால் திமுக எம்எல்ஏக்கள் எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் தலைமையில் வெளிநடப்பு செய்தனர். கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள், காங்கிரஸ், இந்திய முஸ்லீம் கட்சியினரும் வெளிநடப்பு செய்தனர். செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், வெளிநடப்பு செய்ததற்கான காரணத்தை செய்தியாளர்களிடம் விளக்கினார்.

மைனாரிட்டி அரசாக ஆளும் அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. மெஜாரிட்டியை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும். பெரும்பான்மையில்லாத அரசு நீடிப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது.
அதை விட்டு விட்டு குதிரை பேர அரசை ஆளுநர் பாராட்டி கொண்டிருக்கிறார். பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடாததால் வெளிநடப்பு செய்துள்ளோம். தமிழகத்தில் பொருளாதார நிலை சீர்கெட்டுள்ளது.

TN Assembly main opposition leader MK Stalin has slammed the Governor for praising TN Chief Minister Edappadi Palanisamy. DMK and other opposition parties staged a walkout from the Assembly this morning

Recommended