• 6 years ago
ஆண்டாள் பற்றி அவதூறாக பேசிய வைரமுத்துவை கண்டித்து சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நேற்று ஆயிரக்கணக்கான இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராஜபாளையத்தில் கடந்த 7ம் தேதி நடந்த நிகழ்ச்சியில் 'தமிழை ஆண்டாள்' என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து பேசியபோது, அவர் ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சில கருத்துகளை கூறியதாக புகார் எழுந்தது. எதிர்ப்பு அதிகரித்த நிலையில், வைரமுத்து அதற்கு விளக்கம் கொடுத்தார். புண்படுத்துவது தனது நோக்கமில்லை என்றார். ஆனாலும் வைரமுத்துவிற்கு எதிரான எதிர்ப்பு குறையவில்லை.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வைரமுத்துவை கண்டித்து, ஆர்ப்பாட்டம், பேரணி, போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ராஜபாளையம் தெற்கு காவல்நிலையத்தில் கவிஞர் வைரமுத்து மீது அவதூறாக பேசுதல், மத துவேஷம் ஏற்படுத்தும் வகையில் பேசுதல் மற்றும் மக்களின் மத நம்பிக்கையை சீர்குலைத்தல் என 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல சென்னை கொளத்தூர், தாம்பரம்,, சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையங்களிலும் வைரமுத்து மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இயக்குனர் விசு, எஸ்.வி.சேகர், குட்டிபத்மினி, உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர். ஆர்ப்பாட்டத்தில் இந்து அமைப்பினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Thousands of Hindu organizations demonstrated yesterday near the Chepauk Guest House protesting against Vairamuthu

Category

🗞
News

Recommended