• 6 years ago
விகாஸ் பாஹ்ல் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடித்து 2014-ம் ஆண்டு வெளிவந்து பெரும் வரவேற்பையும், வசூலையும் குவித்த படம் 'குயின்'. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஒரே நேரத்தில் தென்னிந்திய மொழிகளான தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்படுகிறது. படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு ஆரம்பமாகி நடந்து வருகிறது. பிரான்ஸ் நாட்டிலும் சுமார் 50 நாட்கள் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிப் படங்களை தெலுங்கு இயக்குனர் நீலகண்டா இயக்குகிறார். தமிழ், கன்னட மொழிப் படங்களை நடிகரும் இயக்குநருமான ரமேஷ் அரவிந்த் இயக்கி வருகிறார்.
இந்த விவகாரம் டோலிவுட்டில் சர்ச்சையைக் கிளப்பியது. ஆனால், தமன்னா, தனக்கும் இயக்குனருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை. அவர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக படக்குழுவினர் இதுவரை எதையும் உறுதிப்படுத்தவில்லை.

Category

🗞
News

Recommended