லாரன்ஸின் அடுத்த படம் டைட்டில் கால பைரவா

  • 6 years ago
ராகவா லாரன்ஸ் தற்போது 'காஞ்சனா 3' படத்தில் நடித்துவருகிறார். அந்தப் படத்தில் ஓவியா,வேதிகா, நிகிதா உள்ளிட்ட பலர் நடித்துவருகின்றனர். அடுத்து பாகுபலி கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் எழுதியுள்ள கதையில் லாரன்ஸ் நடிப்பார் என ஏற்கெனவே தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அந்தப் படத்திற்கு 'கால பைரவா' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பரதன் இயக்கத்தில் விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்த படத்திற்கு 'பைரவா' என தலைப்பு வைத்தபோது அந்த டைட்டிலை பதிவு செய்து வைத்திருந்த ராகவா லாரன்ஸ் விட்டுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 'காஞ்சனா 3' பட வேலைகள் முடிந்ததும் 'கால பைரவா' படத்தை ஆரம்பிக்கிறார் லாரன்ஸ். இதையடுத்து இன்னும் இரண்டு கதைகள் தேர்வு செய்து வைத்திருப்பதாகவும், இதுபற்றிய அறிவிப்பு மார்ச் மாதம் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

Raghava Lawrence is currently acting in 'Kanchana 3'. Lawrence's next film has been reported in the title 'Kaala Bhairava'.