சினிமா கட்டணத்திற்கு கொடுத்த நடிகர்களின் குரல், பேருந்து கட்டணத்திற்கு எங்கே ?

  • 7 years ago
சினிமா டிக்கெட்டுகளுக்கு கேளிக்கை விரி விதிக்கப்பட்ட போது தயாரிப்பாளர்கள் பாதிப்பார்கள் என்று முண்டியடித்து அரசை சந்தித்த நடிகர்கள், பேருந்து கட்டண உயர்வில் கப் சிப் என மவுனமாக இருப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது. மக்களுக்கு நல்லது செய்வதற்காக அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்ன நடிகர் ரஜினி, கமல், விஷால் என ஒருவர் கூட வாய் திறக்காமல் மவுனமாக இருப்பதன் பின்னணி என்ன?

தமிழக அரசியல் களமும், மக்களும் சந்திக்கும் புதிய விஷயமல்ல நடிகர்கள் அரசியலுக்கு வருவது. நடிகர் ரஜினி தனது 22 ஆண்டு கால அரசியல் வருகைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மக்களுக்கு நல்லது செய்ய அரசியலுக்கு வருவேன் என்றார். ஆனால் 3 ஆண்டு அவகாசம் கேட்டதோடு, அதுவரை அரசைப் பற்றிவிமர்சிக்கக் கூடாது என்று தனது ரசிகர்களுக்கு வாய்ப்பூட்டு போட்டோர்.

அரசியலில் தீவிரம் காட்டி வரும் கமலும் அடுத்த மாதம் ராமேஸ்வரத்தில் கலாம் வீட்டில் வைத்து தன்னுடைய அரசியல் கட்சியை அறிவிப்பதாக கூறி இருக்கிறார். அதற்கான வேலைகளிலும் ஜரூராக இறங்கி விட்டார். அவ்வபோது கமலாவது டுவிட்டரில் மக்கள் படும் அவலங்களுக்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருத்து பதிவிட்டு வந்தார். ஆனால் தமிழக மக்களையே கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ள பேருந்து கட்டண உயர்வு குறித்து கமலும் வாய் திறக்காமல் இருப்பது ஏன். அரசியல் கட்சி தொடங்கும் முன்னரே மக்கள் பிரச்னையை விட கட்சிக்கான பணிகள் தான் முக்கியம் என்பதை உணர்த்துகிறாரா கமல்.

அரசு நடவடிக்கை எடுக்கிறதோ இல்லையோ அரசியல் கட்சி தொடங்கி மக்களுக்கு நல்லது செய்வேன் என்று சொன்ன கமல் இந்த விஷயத்திலேயே கோட்டை விட்டது ஏன். அப்படியானால் பேருந்து கட்டண உயர்வால் பாதிப்பை சந்திக்கும் மக்கள் பற்றிய அக்கறை இல்லையா கமலுக்கு என்ற கேள்வி எழுகிறது.

Why political interested actors Rajinikanth, Kamalhaasan and vishal keeps mum in bus fare hike issue, whereas Vishal met CM Palanisamy when entertainment tax is more on cinema tickets.

Recommended