• 6 years ago
பாகமதி படத்தில் ஹீரோவாக நடித்தது குறித்து ஒன்இந்தியாவுக்கு பேட்டி அளித்துள்ளார் உன்னி முகுந்தன். அசோக் இயக்கத்தில் அனுஷ்கா ஐ.ஏ.எஸ். அதிகாரியாக நடித்துள்ள பாகமதி படம் நாளை ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் ஹீரோவாக நடித்துள்ளார். படம் குறித்து அவர் ஒன்இந்தியாவுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது, ஜனதா கேரேஜ் தான் என் முதல் தெலுங்கு படம். ஜனதா கேரேஜில் லைட்டா நெகட்டிவ் ஷேட். வில்லன் கிடையாது. இரண்டாவது படத்திலேயே ஹீரோவானது பெருமையாக உள்ளது. பாகமதி எனக்கு ஒரு பெரிய பிரேக்காக இருக்கும் என நினைக்கிறேன். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிப்பது புதிது அல்ல. மலையாளத்திலும் நடித்துள்ளேன். மலையாளத்தில் தல்சமயம் ஒரு பெண்குட்டி படத்தில் நடித்தேன். அந்த படத்தில் நித்யா மேனன் தான் ஹீரோ. அதற்காக எல்லாம் நான் ஃபீல் பண்ணவே இல்லை. அந்த பழக்கமும் இல்லை. தெலுங்கு திரையுலகினர் ரிஸ்க் எடுப்பார்கள். பேன்டஸி படத்திற்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள். அதனால் பட்ஜெட்டும் அதிகரிக்கிறது. மலையாள திரையுலகில் ரியலிஸ்டிக் படங்கள் தான் போகும். அதற்கு பெரிய பட்ஜெட் தேவைப்படாது. பிற மொழி படங்களில் மலையாள கலைஞர்கள் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் உன்னி முகுந்தன்.

Bhaagamathie hero Unni Mukundan said that he does not feel bad about acting in heroine oriented movie. Anushka starrer is set to hit the screens on republic day.

Recommended