• 6 years ago
மர்மமான முறையில் உயிரிழந்த மகளின் மரணம் குறித்து விசாரணை நடத்தும் போலீசாரின் தரக்குறைவான பேச்சுகளால் மனமுடைந்து நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லுாரை அடுத்துள்ள மாவடிக்காலை சேர்ந்த பொன்னுசாமி என்பவரின் மனைவி மகேஸ்வரி. 50 வயது மகேஸ்வரியின் கணவர் இறந்துவிட்ட நிலையில் 19 வயது மகள் தேவிகங்காவும் கடந்த ஆண்டு மர்மமான முறையில் உயிரிழந்தார். தேவிகங்காவின் மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது மரணத்திற்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்று தெரிகிறது.
எனவே போலீசார் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகேஸ்வரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார். இருப்பினும் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் தென்காசி நீதிமன்றத்தில் மகேஸ்வரி மனு செய்தார். கோர்ட், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. இருப்பினும் இதுகுறித்து விசாரணைக்கு அழைத்த புளியங்குடி போலீஸ் அதிகாரி, மகேஸ்வரியை தரக்குறைவாக திட்டியுள்ளனர்.




50 years old lady tried to self immolates her in front of Thirunelveli collectors office entrance seeking justice of her 19 years old daughter mysterious death, fortunately police proteccted her before set ablaze.

Category

🗞
News

Recommended