கர்நாடக தேர்தல் பிரச்சாரத்திற்கும் பசுவை கையில் எடுக்கும் பாஜக- வீடியோ

  • 7 years ago
இந்தியா முழுக்க பாஜக ஆளும் மாநிலங்களிலும், பாஜக கட்சி பலமாக இருக்கும் மாநிலங்களிலும் 'கவ் ரக்ஷா' எனப்படும் பசு பாதுகாப்பு படை செயல்பட்டு வருகிறது. இவர்கள் பல சமயங்களில் மோசமான வன்முறைகளில் கூட ஈடுபட்டு இருக்கிறார்கள். தற்போது இவர்கள் கர்நாடக மாநிலத்தில் புதிய பிரச்சாரம் செய்ய இருக்கிறார்கள். பசுக்களை எப்படி பாதுகாக்க வேண்டும் என்று இந்த பிரச்சாரத்தில் கூறப்பட உள்ளது. இதில் முக்கியமான பாஜக நிர்வாகிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். சில காலத்தில் கர்நாடக மாநில தேர்தல் நடக்க இருக்கும் சமயத்தில் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

ஒவ்வொரு கட்சியிலும் ஐடி செல், பிரச்சார செல் என நிறைய பிரிவுகள் இருக்கும். அதேபோல் கர்நாடக பாஜக கட்சியில் பசு பாதுகாப்பு செல் என்ற அமைப்பு இருக்கிறது. இந்த அமைப்புதான் இந்த பிரச்சாரத்தை ஏற்பாடு செய்து இருக்கிறது.

இந்த பிரச்சாரத்தில் பசுவின் பல்வேறு நன்மைகள் என்ன என்று கூறப்பட உள்ளது. அதேபோல் பசுவை எப்படி எல்லாம் பாதுகாக்க வேண்டும் என்றும் கூறப்படும். மேலும் மாட்டுக்கறி ஏன் உண்ண கூடாது என்றும் பேசப்பட இருக்கிறது.
வரும் பிப்ரவரி 2ம் தேதி பெங்களூரின் தெற்கு பகுதியில் இந்த நிகழ்வு நடக்க இருக்கிறது. தொடர்ந்து 24 மணி நேரம் இந்த பிரச்சாரம் நடக்கும். ஒவ்வொரு மக்களாக சந்தித்து பசு பாதுகாப்பு குறித்து விளக்கப்படும்.

BJP campaigns for cow protection in Karnataka on Feb 2 in south Banglore. Top BJP officials will attend this campaign. BJP cow protection cell will lead the event.

Recommended