மத்திய பட்ஜெட் 2018-விவசாயத் துறை- வீடியோ

  • 6 years ago
விவசாயிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். 2018-19ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலை 11 மணிக்கு தாக்கல் செய்தார்.

பாஜக அரசின் கடைசி முழுமையான பட்ஜெட், ஜிஎஸ்டி அமலாக்கத்துக்குப் பின் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் ஆகிய காரணங்களால் இதில் முக்கிய அறிவிப்புகள் பல வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த 2014ஆம் ஆண்டு முதல் இதுவரை இல்லாத அளவிற்கு இந்த பட்ஜெட்டில் விவசாயத்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. உணவு பதப்படுத்தல் துறைக்கான முதலீடு 2 மடங்காக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 42 ஹைடெக் உணவு பூங்காக்கள் அமைக்கப்படும் என்று அருண் ஜெட்லி கூறியுள்ளார். பட்ஜெட்டில் விவசாய துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முக்கிய அம்சங்கள்

The government has proposed setting up an agricultural market fund of Rs 2,000 crore. Agri exports have the potential of USD 100 bn and therefore, state of art facility will be set up in 42 food parks for agri exports, Jaitley says.

Recommended