பட்ஜெட் 2018-19, தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?- வீடியோ

  • 7 years ago
அருண் ஜெட்லியின் பட்ஜெட் உரையின் மூலம் ஆளும் பாஜக அரசு தோல்வியடைந்துள்ளது நிரூபணமாகி உள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்து உள்ளார்.

2018-19ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். 2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முந்தைய பாஜக அரசின் இறுதி முழு பட்ஜெட் என்பதால், பலவித எதிர்பார்ப்புகளை இந்த பட்ஜெட் எழுப்பி இருந்தது.

பட்ஜெட் தாக்கல் முடிவடைந்த நிலையில், அது குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். எதிர்க்கட்சியினர் இந்த பட்ஜெட் மிகவும் மோசமான பாதையில் இந்தியாவை அழைத்துச்செல்லும் என்று குறிப்பிட்டு உள்ளனர்.

இந்நிலையில், இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்து பேசியுள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், மிகவும் மோசமான அம்சங்களைக் கொண்ட பட்ஜெட் அறிக்கை இது. தோல்வியடைந்த அரசு என்பதை இந்த பட்ஜெட் அறிவிப்பின் மூலம் நிதியமைச்சர் அருண் ஜெட்லி நிரூபித்து உள்ளதாக அவர் குறிப்பிட்டு உள்ளார். மேலும், கடந்த நிதியாண்டில் 3.25 இருந்த நிதிப்பற்றாக்குறை இந்த ஆண்டு 3.5% ஆக அதிகரித்து உள்ளது. இந்த பட்ஜெட் அறிவிப்பால் இந்தியா விரைவில் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.


Tamilnadu Political Party Leaders view on Budget 2018-2019. MDMK General Secretary Vaiko says that this Budget wont help to Farmers in any case and This is not a Good Budget that gives growth for India.

Recommended