• 6 years ago
இப்போது இணையத்தளத்திலேயே பொருட்களை வாங்கும் ஆன்லைன் ஷாப்பிங் மிகவும் அதிகம் ஆகிவிட்டது. சிறுசிறு பொருட்கள் தொடங்கி அதிக விலையுள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் வரை அனைத்தும் இணையம் மூலமே வாங்கப்படுகிறது. இதில் சமயங்களில் குளறுபடியும் நடக்கிறது. சரியான நேரத்தில் பொருட்களை கொண்டுவராதது, உள்ளே மோசமான நிலையில் பொருட்களை வைத்து இருப்பது என சில பிரச்சனை எழும்பி இருக்கிறது. அப்படித்தான் தற்போது மும்பையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அங்கு ஐஃபோன் ஆர்டர் செய்த நபருக்கு டிடர்ஜென்ட் சோப் டெலிவரி செய்யப்பட்டு இருக்கிறது.
மும்பையை சேர்ந்த நபர் தப்ராஜ் மெஹபூப் நெஹ்ராலி என்பவருக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. அவர் பிளிப்கார்ட்டில் 55 ஆயிரம் கொடுத்து ஐஃபோன் 8 ஆர்டர் செய்து இருக்கிறார். ஆனால் அவருக்கு ஐஃபோனுக்கு பதிலாக துணி துவைக்கும் சோப்பு வழங்கப்பட்டு உள்ளது.

இந்த செய்தி இணையம் முழுக்க வைரல் ஆகியது. இவர் ''இதுதான் உங்கள் கஸ்டமர் சர்விஸா? ஐஃபோனுக்கு பதில் சோப் அனுப்பி இருக்கிறீர்களா? உங்களுடைய கஸ்டமர்கள் சரியான பொருட்களை பெறுகிறார்களா என்று நீங்கள் தான் கவனிக்க வேண்டும். எல்லாவற்றிற்கு கஸ்டமர்களை குறை சொல்ல கூடாது'' என்றுள்ளார்.





Flipkart delivers soap to customer named Tabrej Mehaboob Nagrali instead of I Phone 8 in Mumbai. Tabrej Mehaboob Nagrali complains in the police against Flipkart.

Category

🗞
News

Recommended