அடுத்து மின் வாரிய ஊழியர் ஸ்டிரைக் .. கட்டணம் உயருமோ.. மக்கள் பீதி!!

  • 6 years ago
ஊதிய உயர்வு கேட்டு போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தினர், இந்த போராட்டம் முடிவுக்கு வந்த 2 நாட்களில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது, அதே போன்று தற்போது ஊதிய உயர்வு கேட்டு மின்வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்த முடிவை எடுத்துள்ளதால் மின்கட்டணம் உயருமோ என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர். தமிழக அரசின் மின்வாரிய ஊழியர்களுக்கு கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி முதல் 2.57 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அரசு கூறி இருந்தது.

ஆனால் 2 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ஊதிய உயர்வு காலதாமதமாகி வருகிறது. இதனிடையே அறிவிக்கப்பட்ட 2.57 சதவீதத்திற்குப் பதிலாக மின்வாரிய ஊழியர்களுக்கு 2.4 சதவிகித அடிப்படையில் இடைக்கால நிவாரணம் வழங்கப்படும் என்று அரசு அண்மையில் அறிவித்துள்ளது.

ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறி புதிய உத்தரவை அரசு அறிவித்துள்ளதற்கு சி.ஐ.டி.யு. மற்றும் பி.எம்.எஸ். உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசின் முடிவை கண்டித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக மின்வாரிய ஊழியர்கள் அறிவித்தனர். இதனையடுத்து கடந்த மாதத்தில் தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் சமரச பேச்சுவார்த்தை நடந்தது.

TN People were in fear that whether the EB employees announcement about indefinite strike seeking salary hike reflects in EB tariff as recently after transport employees strike government increased the bus fare.

Recommended