தமிழக மக்களுக்காக முக்கிய முடிவு அறிவிக்க உள்ளேன் - டி.ராஜேந்தர்-வீடியோ

  • 6 years ago
தமிழக மக்களை வாழவைக்க நாளை முக்கிய முடிவை எடுக்க உள்ளதாக லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். மாற்றத்தை கொண்டு வருகிறேனோ இல்லையோ நிச்சயம் என்னுடைய முடிவில் தடுமாற்றம் இருக்காது என்றும் டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.


லட்சிய திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் டி.ராஜேந்தர் தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலுக்கு ஏற்ப பிப்ரவரி 28ல் முக்கிய முடிவை அறிவிக்கப்போவதாக ஏற்கனவே கூறியுள்ளார். இந்நிலையில் திருச்சி விமான நிலையத்தில் இன்று டி. ராஜேந்தர் செய்தியாளர்களை சந்தித்துள்ளார்