• 7 years ago
திருச்சியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் தாக்கி கர்ப்பிணிப் பெண் உயிரிழந்த விவகாரத்தில் அவர் மீது கொலை வழக்கு பதிய நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

மதுரை : திருச்சியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் தாக்கி கர்ப்பிணிப் பெண் உயிரிழந்த விவகாரத்தில் அவர் மீது கொலை வழக்கு பதிய சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி அருகே நேற்று மாலை ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் சென்ற தம்பதியை விரட்டிச் சென்று ஆய்வாளர் காமராஜ் வாகனத்தை எட்டி உதைத்ததில் கீழே விழுந்த கர்ப்பிணிப் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை கண்டித்து இரவு பொதுமக்கள், சாலை மறியலில் ஈடுபட அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்த சம்பவங்கள் அரங்கேறின.

Category

🗞
News

Recommended