• 7 years ago
ஸ்ரீதேவி தனக்கு மிகவும் பிடித்த நடிகை என்றும், அவரை காதலித்ததாகவும் ஆமீர் கான் தெரிவித்துள்ளார். திருமண நிகழ்ச்சிக்காக துபாய் சென்ற ஸ்ரீதேவி சவப்பெட்டியில் திரும்பி வருவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அவரின் திடீர் மரணத்தால் பாலிவுட் அதிர்ச்சியில் உள்ளது. இந்நிலையில் ஸ்ரீதேவி பற்றி நடிகர் ஆமீர் கான் கூறியிருப்பதாவது, நான் ஸ்ரீதேவியின் தீவிர ரசிகன். எனக்கு மிகவும் பிடித்த நடிகை அவர் தான். நான் நடிக்க வந்த புதிதில் ஒரு பத்திரிகை ஸ்ரீதேவியுடன் போட்டோஷூட்டில் கலந்து கொள்ள அழைத்தது. போட்டோஷூட்டில் மிகவும் பதட்டமாக இருந்தேன். ஸ்ரீதேவிக்கு முன்பு செல்லவில்லை என்றால் நான் அவரை காதலிக்கும் விஷயம் அவருக்கு தெரிந்துவிடுமே என்று பயமாக இருந்தது. எனக்கு ஸ்ரீதேவி என்றால் மிகவும் பிடிக்கும். அவரின் திடீர் மரணத்தால் கவலை அடைந்தேன். அவரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களை என்றும் மறக்கவே மாட்டேன் மேடம் என்று ஆமீர் தெரிவித்துள்ளார். ஸ்ரீதேவி இறந்த நேரம் ஆமீர் கான் அமெரிக்காவில் இருந்தார். அதனால் அவரால் ஸ்ரீதேவியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியவில்லை. ஆனால் போனி கபூரிடம் போனில் பேசி ஆறுதல் கூறினார்.

Aamir Khan, who was one of the biggest fans of Sridevi, is deeply disturbed by her tragic death. In a recent interview, Aamir revealed that Sridevi was his number one favourite and he was in love with her.

Category

🗞
News

Recommended