ஆன் தேவதை ட்ரைலர் லான்ச்!- வீடியோ

  • 6 years ago
தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் ராஜ்கிரணுக்கு இருந்த மரியாதையும் டிமாண்டும் (இப்போதும் அது குறையவில்லைதான்) இப்போது சமுத்திரக்கனிக்கு! அடுத்தடுத்து புதிய படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். அவர் அடுத்து நடிக்கும் புதுப்படத்துக்கு ஆண் தேவதை எனப் பெயரிட்டுள்ளனர். பெண்தானே தேவதை? இது என்ன 'ஆண் தேவதை'? இது முழுக்க முழுக்க சென்னைப் பின்னணியில் நடக்கும் கதை. "இன்று உலக மயமாக்கல், நகரமயமாக்கல் சூழல்தான் பெரும்பாலான நகரவாசிகளை இயக்குகிறது. போடுகிற சட்டை முதல் பேசும் அலைபேசியின் நெட்ஒர்க் வரை எதையும் அதுவே முடிவு செய்கிறது. இப்படிப்பட்ட இன்றைய பரபர சூழலில் குழந்தை வளர்ப்பு, கணவன் மனைவி உறவு போன்றவை எந்த அளவுக்கு சிக்கலை எதிர்கொள்கின்றன என்பதைப் பற்றிப் பேசுகிறது இந்தப் படம். ஒரு தாயிடம் வளரும் குழந்தைக்கும் தந்தையிடம் வளரும் குழந்தைக்கும் என்ன வேறுபாடு? இன்று நிலவும் பொருளாதார சூழலும், கடன் வாங்கும் மனப்பான்மையும் மனிதர்களை எந்த எல்லைக்கு அழைத்து​ச் செல்கிறது என்பதையும் படம் உணரவைக்கும்," என்கிறார் படத்தை இயக்கும் தாமிரா. இவர் பாலச்சந்தரின் தீவிர மாணவர். பாலச்சந்தரையும் பாரதிராஜாவையும் இணைத்து ரெட்டச்சுழி படத்தை இயக்கியவர். 'ஆண் தேவதை'யில் சமுத்திரக்கனியுடன், ரம்யாபாண்டியன், கவின், கஸ்தூரி, 'பூ' ராமு, இளவரசு, ஸ்ரீநிகா, பிரகதீஷ், அறந்தாங்கி நிஷா​,யாழ் நிலா, மயில்சாமி, அருண்மொழி, திலீபன் ​மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

Samuthirakkani is playing lead role in Thamira directed Aan Devathai movie. The movie trailer is being released by 10 different celebrities on their twitter handle.

Recommended