ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாஸன் நடிக்கவிருக்கும் இந்தியன் 2 படம் விரைவில் தொடங்கவிருக்கிறது. ஹைதராபாதில் இதன் படப்பிடிப்பு நடக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கமல் ஹாஸன் நடிப்பில் 90களில் வெளியான படம் இந்தியன். ஷங்கர் இயக்கிய இந்தப் படத்துக்கு சுஜாதா கதை வசனம் எழுதியிருந்தார். இந்தப் படம் வெளியாகி கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் ஆன நிலையில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கவிருக்கிறார்கள். இயக்குநர் ஷங்கர் இயக்கும் இந்தப் படத்திலும் கமல் ஹாஸனே நாயகனாக நடிக்கிறார். கமல் ஹாஸன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிஸியாக இருந்த நேரத்தில் இந்தப் படம் அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு கமல் ஹாஸன் தனது அரசியல் பிரவேசத்தில் தீவிரமாகிவிட்டார். தனிக்கட்சி ஆரம்பித்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் கமல் ஹாஸன். இ்த நிலையில் நின்று போயிருக்கும் தனது சினிமா புராஜெக்டுகளையும் முடுக்கிவிடும் வேலைகளில் தீவிரமாக உள்ளார். முதலில் விஸ்வரூபம் 2, அடுத்து சபாஷ் நாயுடு மற்றும் இந்தியன் 2 ஆகிய படங்களை திரைக்குக் கொண்டுவருகிறார். இவற்றில் முதல் இரு படங்களும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. இந்தியன் 2 படம் விரைவில் தொடங்குகிறது. இப்போது ரஜினியின் 2.ஓ படத்தில் தீவிரமாக உள்ள இயக்குநர் ஷங்கர், அந்த வேலைகளை முடித்த கையோடு இந்தியன் 2வை தொடங்குகிறார். ஹைதராபாதில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Kamal Haasan - Shankar's Indian 2 shooting will be started at Ramoji Rao film city soon.
Kamal Haasan - Shankar's Indian 2 shooting will be started at Ramoji Rao film city soon.
Category
🗞
News