ஸ்ட்ரைக், வரலக்ஷ்மி, ஆர்யாவை பற்றி பேசிய விஷால்

  • 6 years ago
இயக்குநர் திரு இயக்கத்தில் கௌதம் கார்த்திக், நவரச நாயகன் கார்த்திக் இணைந்து நடிக்க 'மிஸ்டர் சந்திரமௌலி' படம் உருவாகியிருக்கிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இப்படத்தில் ரெஜினா, வரலட்சுமி, இயக்குநர் மகேந்திரன், இயக்குநர் அகத்தியன், சந்தோஷ், சதீஷ், ஜெகன், விஜி சந்திரசேகர், 'மைம்' கோபி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஷால் கலந்துகொண்டார். சுசீந்திரன் விஷாலை கிண்டல் செய்ய பிறகு பேசிய விஷால் யாருக்காக இந்த விழாவுக்கு வந்தேன் எனத் தெரிவித்தார். அப்போது பேசிய விஷால், "ஆர்யா 'எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியில் கலந்துக்கிட்டதை பத்தி கார்த்திக் சார் கேட்டார். இங்க ஃப்ரீயா பண்ணிட்டு இருந்ததை அங்க காசு கொடுத்து பண்ண வெச்சாங்க. அந்த நிகழ்ச்சியில் எந்தளவுக்கு நேர்மையா கலந்துக்கிட்டார்னு ஆர்யா தான் சொல்லணும்." என்றார். "தயாரிப்பாளர் சங்கம் சார்பாக, அனைத்து நடிகர் நடிகைகளுக்கும், இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிச்சுக்கிறேன். 48 நாள் வேலைநிறுத்தம்ங்கிறது சாதாரண விஷயம் இல்ல. இந்த வெற்றி என்னோடது இல்ல. தயாரிப்பாளர் சங்கம் மூலமா நாம பண்ணின முயற்சிகள் வழியாக இந்திய சினிமா உலகே தமிழ் சினிமாவை திரும்பிப் பார்க்கிற மாதிரி சாதனை செஞ்சிருக்கோம். ஒண்ணு தியேட்டர்காரங்க சம்பாதிக்கணும். இல்ல படம் எடுக்கிற தயாரிப்பாளர்கள் சம்பாதிக்கணும்.

Producer council president Vishal talks about cinema strike in Mr.Chandramouli audio launch. Gautham Karthik starred 'Mr. Chandramouli' music launch event was held today. Director Suseenthiiran asks vishal 'You came here for thiru or varu?'. Vishal replied to that. Vishal speaks about Enga veettu maappillai show in 'Mr.Chandramouli' audio launch.

#mrchandramouli #audiolaunch #vishal