கண்ணகி கோட்டத்தில் சித்திரை முழுநிலவு விழா

  • 6 years ago

கண்ணகி கோட்டத்தில் சித்திரை முழுநிலவு விழா

மங்கலதேவி மலையில் உள்ள சரித்திர புகழ் பெற்ற கண்ணகி கோட்டத்தில் சித்திரை முழுநிலவு விழா தமிழக மற்றும் கேரள பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொணடனர்.

தேனி மாவட்டம் கூடலூருக்கு தெற்கேயுள்ள வண்ணாத்திப்பாறையில்.தமிழக கேரள எல்லைப்பகுதியான ஐந்தாயிரம் அடி உயரத்தில் உள்ள கண்ணகி கோட்டத்தில் சித்திரை முழுவிழா நடைபெறுகிறது.காலை 6 மணிமுதல் பக்தர்கள் கூடலூர் பளியன்குடி வதியாக நடந்தும்,குமுளி கொக்கரக்கண்டம் வழியாக ஜீப் மூலமகவும் கண்ணகி கோவிலுக்கு வரதுவங்கினர்.பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் இக்கோவில் இருப்பதால் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு இருமாநில அரசுகள் சார்பாகவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. புகையிலை,சிகரட்,போன்ற போதை வஸ்துக்களும்,பிளாஸ்டிக் பெருட்கள் கொண்டு செல்ல தடை செய்யப்பட்டு இருந்தது.மேலும் கேரளா மாநிலம் குமுளி வழியாக வந்த இருபால் பக்தர்களும் மெட்டல் டிடக்டர் சேதனைக்குபிறகே அனுப்பப்பட்டனர்.

கேரளா வழி தடங்கள் சீர் அமைக்காமல் ஜீப் மூலம் வந்த பக்தர்கள் மிகவும் சிறமத்தில் கோவிலுக்கு வந்தனர் நடைபயணம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துறை சார்பில் சிறப்பு பஸ்களை கம்பத்திலிருந்து பளியன்குடி வரை சிறப்பு பஸ்களை இயக்கப்பட்டுள்ளது. தமிழக மற்றும் கேரள பகுதிகளிலிருந்து ஜீப் மூலமாகவும் தமிழக வழியாக பளியன்குடி மலைப்பாதை வழியாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.அம்மன் அருள் பெற்றனர்.மேலும் தழிழக வழியாக சாலை அமைக்க அரசு முன்வர வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

des : Tens of thousands of devotees from Tamilnadu and Kerala took part in the famous Kannagi Devi Temple in Mangaladevi.

Recommended