• 7 years ago

யரம் குறைந்த இளமையான தோற்றம் கொண்டவரான ஸ்ரித்திகா, கல்யாணமாம் கல்யாணம் சீரியலில் ஹீரோ சூர்யாவுக்கு அம்மாவாக அதிரடி எண்ட்ரி கொடுத்திருப்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. சினிமாவில் நாயகியாக அறிமுகமாகி, தற்போது சின்னத்திரையில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருப்பவர் ஸ்ரித்திகா. பிரேமம் மலர் டீச்சரைப் போலவே, தனது நாதஸ்வரம் சீரியலில் மலர் கதாபாத்திரம் மூலம் பிரபலமானவர் இவர். நாதஸ்வரம் சீரியலைத் தொடர்ந்து, குலதெய்வம் சீரியலில் நடித்தவர், தற்போது விஜய் டிவியின் கல்யாணமாம் கல்யாணம் சீரியலில் நடித்து வருகிறார். விஜய் டிவியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது கல்யாணமாம் கல்யாணம் சீரியல். தேஜா நாயகனாகவும், ஸ்ரீத்து நாயகியாகவும் நடித்துள்ள இத்தொடரை பிரம்மா இயக்கி வருகிறார். ஆர்.சுந்தர்ராஜன் மற்றும் மௌலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


The 31 years old actress Srithika is playing the mother role for a 25 year old young man in vijay Tv's Kalyanamam kalyanam serial. Tamil serial actress Srithika acts as surya's mother in vijay tv kalyanamaam kalyaanam serial.


#srithika #kalyanamaamkalyanam #vijaytv

Category

📺
TV

Recommended