நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று | குமாரசாமி கர்நாடக முதல்வராக நீடிப்பாரா?- வீடியோ

  • 6 years ago
கர்நாடக சட்டசபை பரபரப்பான சூழ்நிலையில் இன்று மதியம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது. காங்கிரஸ்- மத சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியில் முதல்வராக பதவியேற்று இருக்கும் குமாரசாமி இன்று சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை கோருகிறார். கர்நாடகாவில் இரண்டு வாரம் முன்பு தேர்தல் முடிந்தது. இதை அதிக இடங்களில் வெற்றிபெற்ற பாஜக ஆட்சி அமைக்க உரிமை கோரியது. ஆனாலும் பெரும்பான்மை இல்லாத காரணத்தால், நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமலே எடியூரப்பா பதவி விலகினார். இதனால் தற்போது மத சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி முதல்வராக பதவியேற்றுள்ளார்.

H D Kumaraswamy whose Janata Dal (S) is in an alliance with the Congress will take the floor test at the Karnataka Legislative Assembly today. The new found alliance is confident of sailing through the trust vote as it enjoys the numbers in the 222 member House.

Recommended