கவின்மலர் (தினகரன்) பொதுவாக தமிழகத்தில் பெண்கள் எதிரான பாலியல் ரீதியாக அவதூறு செய்பவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படாமல் பாரபட்சம் காட்டப்பட்டு வருகிறது. உதாரணமாக என் மீதே பாலியல் அவதூறு சம்பவம் ஒன்று நடைபெற்றபோது, அது குறித்து புகார் அளித்தேன். ஆனால் இதுவரை அந்த புகாரின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. ஆனால் இதேபோன்று பின்னணி பாடகி சின்மயி பாலியல் தொடர்பான ஒரு அவதூறு புகார் அளித்தார். ஆனால் அதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் எஸ்.வி.சேகர் மீது கொடுக்கப்பட்ட புகார் குறித்து ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஜாமீனும் மறுத்தாகிவிட்டது. உச்சநீதிமன்றமே அவரை கைது செய்ய தடை இல்லை என உத்தரவு பிறப்பித்தாகிவிட்டது. ஆனாலும் எஸ்.வி.சேகரை இந்த அரசு ஏன் பாதுகாக்கிறது?
Category
🗞
News