மனதை நெகிழ வைத்த மாணவன் செயலுக்கு..எஸ்பி பாராட்டு- வீடியோ

  • 6 years ago
​அரசு பள்ளியில் 2ம் வகுப்பு படிக்கும் மாணவன் கீழே கிடந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து பள்ளி ஆசிரியையிடம் வழங்கியதால் மாணவனின் செயலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.

ஈரோடு அடுத்த சின்னசேமூர் நந்தவனத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பாட்ஷா இவரது மனைவி அப்ரூத்பேகம் இவர்களுக்கு முகமது முஷாமில் முகமது யாஷின் என இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் சின்னசேமூரில் உள்ள நடுநிலைப்பள்ளியில் முகமது முஷாமில் 8ம் வகுப்பும்இ முகமது யாஷின் 2ம் வகுப்பும் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று மதியம் பள்ளிக்கு வெளியே உள்ள கழிவறைக்கு சென்ற மாணவன் முகமது யாஷின் கீழே அனாதையாக கிடந்த பணக்கட்டை பார்த்துள்ளார். அதனை எடுத்து நேராக அவரின் பள்ளி வகுப்பு ஆசிரியை ஜெயந்திபாஸிடம் சென்று கழிவறை அருகே பணம் கிடந்துள்ளது எனக்கூறி அதனை ஆசிரியையிடம் கொடுத்துள்ளார். அதனை எண்ணிப் பார்த்த ஆசிரியை 50 ஆயிரம் ரூபாய் பணம் இருந்துள்ளது தெரியவந்தது.

இதனையடுத்து பணத்தை எடுத்துக் கொடுத்த மாணவன் முகமது யாஷினை அழைத்துக் கொண்டு பள்ளி தலைமை ஆசிரியையிடம் சம்பவத்தை கூறியுள்ளனர். பின்னர் அந்த பணத்தை காவல்துறையினரிடம் ஒப்படைக்க முடிவு செய்து அந்த மாணவனின் பெற்றோர்களை வரவழைத்து அவர்களையும் அழைத்துக் கொண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசனிடம் நேரில் சென்று பணத்தை ஒப்படைத்தனர்.

பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் கீழே கண்டெடுத்த பணத்தை நேர்மையாக ஒப்படைத்த மாணவனின் நேர்மையை பாராட்டினார். மேலும் வரும் 19ம் தேதி நடைபெறும் காவல்துறையினருக்கான ஆய்வுக் கூட்டத்தில் பாராட்டு சான்றிதழ் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

des: The District Police Superintendent praised the student's action as the 2nd grade student at the government school gave him the amount of 50 thousand rupees to the school teacher.

Recommended