ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக நிகழாண்டு முதல் 6 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும் - முதலமைச்சர்

  • 6 years ago
சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறையில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10 புதிய சார்பதிவாளர் அலுவலகங்கள் கட்டப்படும் என்றும், சிறுபான்மை மக்கள் ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக நிகழாண்டு முதல் 6 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஒன்றரை கோடி மதிப்பீட்டில் வேலைவாய்ப்பு அலுவலகம் கட்டப்படும், 595 பள்ளிக்கல்லூரி விடுதிகள் 5 கோடி மதிப்பில் பழுதுப்பார்க்கப்படும், கட்டுமான தொழிலாளர்களின் பாதுகாப்பு கருதி முதற்கட்டமாக 25 ஆயிரம் தொழிலாளர்களுக்கு 5 கோடி ரூபாய் செலவில், பாதுகாப்பு பெட்டகம் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Recommended