நீட் தேர்வு, புது தரவரிசைப்பட்டியலால் மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கையில் புதிய சிக்கல்

  • 6 years ago
நீட் தேர்வில் தமிழ் வினாத்தாளில் சரியாக மொழியாக்கம் செய்யப்படாததால் மாணவர்கள் மதிப்பெண்களை இழப்பதாக சத்தியம் தொலைக்காட்சி விரிவான செய்தி வெளியிட்டது. இதனை வைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. ரங்கராஜன் வழக்கு தொடர்ந்தார். அதில் தமிழ் வினாத்தாளில் சரியாக மொழியாக்கம் செய்யப்படாத 49 வினாக்களுக்கு ஒவ்வொன்றுக்கும் தலா 4 மதிப்பெண் என 196 கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தார். இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் சி.டி. செல்வம், பஷீர் அகமது அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். பிழையுடன் மொழி பெயர்க்கப்ட்ட 49 வினாக்களுக்கும் தலா 4 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 196 மதிப்பெண்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மருத்துவப்படிப்புக்கு 2 வாரத்தில் புதிய தரவரிசை பட்டியலை வெளியிடவும் சிபிஎஸ்இக்கு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவால், மருத்துவப் படிப்பு கவுன்சிலிங்கில் பெரும் குழப்பம் ஏற்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இதனால் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் செய்வதறியாது திணறி வருகின்றனர். இதற்கிடையே உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Recommended