குப்பை மேடாக காட்சியளிக்கும் திருச்சி- வீடியோ

  • 6 years ago
மாநகராட்சி நிர்வாகம் சரிவர குப்பைகள் அள்ளாததால், திருச்சி மலைக் கோட்டை, பாலக்கரை, தில்லைநகர் உள்ளிட்ட மாநகரின் பல்வேறு பகுதி முழுவதும் குப்பை மேடாக காட்சியளிக்கிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

திருச்சி மாநகராட்சியில் உள்ள கழிவு நீர் கால்வாய் மற்றும் குப்பைகள் நிர்வாகம் சரிவர அள்ளி அப்புறப்படுத்தவில்லை. இதனால் பொதுமக்களால் நடந்து செல்ல கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல நாட்களாக தேங்கி கிடக்கும் குப்பைகளில் இருந்து கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் திருச்சி மாநகரில் உள்ளவர்களுக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டு 30க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையில் திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட பாலக்கரை, இருதயபுரம், கீழ கள்ளுகார தெரு பகுதியில் சுகாதாரத்துறை சார்பில் வீடு வீடாக சென்று ரத்த மாதிரிகளை எடுத்து வருகின்றனர். ஈது குறித்து பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகையில் பாசன வாய்க்கால்களில் சாக்கடை நீர் கலந்து பிளாஸ்டிக் மற்றும் குப்பைகள் தேங்கியுள்ளதால் மாவட்ட நிர்வாகம் சாக்கடை வாய்க்கால்களை தூர்வாராமல் வருடக்கணக்காக இருப்பதால்,கொசுக்கள் அதிக அளவில் இருப்பதாகவும் இதனை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் தவறிவிட்டதாகவும், இதனால் பாதித்துள்ளதாகவும் உடனடியாக போர்க்கால அடிப்படையில் மாநகராட்சி நிர்வாகம் செயல்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

des: The Municipal Corporation is not in the trash, but the trash across the various parts of the city, including the Trichy Mountain Fort, Palakkara and Thillainagar. There is a risk of spreading infection.

Recommended