அர்ஜுன் சம்பத் புகார் மனு- வீடியோ

  • 6 years ago
ஆகஸ்ட் 3-ல் தீரன் சின்னமலை விழாவில் பதட்டசூழலை உருவாக்கும் வகையில் செயல்படும் காங்கயம் சட்டமன்ற உறுப்பினர் உதனியரசு அவர்களின் உள்நோக்கத்துடன் கூடிய செயல்களை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் புகார் மனு அளித்துள்ளார்

ஆடிப்பெருக்கு தினத்தன்று சுதந்திரப் போரட்ட வீரர் தீரன் சின்னமலை அரச்சலுர் ஒடாநிலையிலும், சங்ககிரி கோட்டையிலும் ஆண்டுதோறும் அரசு விழா எடுத்து வருகிறது.கடந்த காலங்களில் இவ்விழாக்களில் குழப்பத்தையும், பதட்டத்தையும் ஏற்படுத்தும் வகையில் விளம்பரம் தேடும் அரசியல் உள்நோக்கத்துடன் உதனியரசு செயல்பட்டு வருகிறார். மேலும் தனியரசு அவர்களது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது போன்ற நிகழ்வுகள் சாதி, மத கலவரங்களை தூண்டும் உள்நோக்கத்துடன் தனியரசுவின் செயல்பாடுகள் உள்ளன.

மேலும் இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த தமிமுன் அன்சாரி, திரைப்பட இயக்குனர் அமீர் ஆகியோருக்கு ஆதரவாக செயல்படுவதோடு இந்து சமய நம்பிக்கைகளை புண்படுத்தும் முறையில் பேசி வருகிறார். மேலும் கொங்கு சமுதாய பெண்களை இழிவுபடுத்தும் உள்நோக்கத்துடன் எழுதபட்ட மாதொரு பாகன் நூலாசிரியர் பெருமாள் முருகனுக்கு ஆதரவாக தனியரசு செயல்பட்டு வருகிறார். இதனால் வரும் ஆகஸ்ட் 3-ந்தேதி தீரன் சின்னமலை நினைவிடத்திற்கு விழாவை சீர்குலைக்கும் எண்ணத்துடன் வருகை தரும் உ தனியரசு மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கும் படி கோரி ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் அர்ஜுன் சம்பத் புகார் மனு அளித்தார்

Des : Arjun Sampath's complaint to Erode District Police Superintendent has been granted to the Erode District Police Superintendent, urging the Congress to act on the cause of the legislative body Uthanarasu

Recommended