நெல்லையில் நடைபெற்ற கலைஞர் கருணாநிதியின் நினைவேந்தல் கூட்டத்தில் பங்குபெறுவதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானம் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் சென்றார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், முதல்வர் மற்றும் துணை முதல்வர் மீதான குற்றச்சாட்டினை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் இருவரும் பதவி விலகிய பின்னர் மாநில போலீசார் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். மேலும் திருநாவுக்கரசர் குறித்து தமிக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த அவர், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தன்னை பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும், அவர் தனது எதிர்காலம் குறித்து கவலைப்பட்டால் போதும் என விமர்சித்தார்
Category
🗞
News