சென்னை, பெசன்ட் நகர் கடற்கரையில் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பாக சர்வதேச யோகா திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன், சுற்றுலா துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மற்றும் யோகாவில் பத்மா ஸ்ரீ பட்டம் வென்ற மூதாட்டி ஞானம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.ஃ.பா.பாண்டியராஜன், தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வர தமிழக அரசு அனைத்து நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். யோகாவை போட்டி விளையாட்டாக கொண்டு வருவதற்கு விளையாட்டு வல்லுனர்கள் கொண்ட குழு முடிவு எடுக்க வேண்டும் என தெரிவித்தார். வரும் 30 ஆம் தேதி கருணாநிதியின் நினைவேந்தல் கூட்டத்திற்கு அதிமுகவிற்கு அழைப்பு விடுக்கப்படதாது குறித்து கேள்வி எழுப்பப்பட்டதற்கு, அழைப்பு விடுப்பது அவர்களின் விருப்பம் என்றும், தமிழக முதல்வர், துணை முதல்வர் அவருக்கு வழங்க வேண்டிய மரியாதையை முறையாக வழங்கியுள்ளதாக தெரிவித்தார்
Category
🗞
News