சென்னை, ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் உணவகத்தில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு சுய சக்தி விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பங்கேற்று விருதுகளை வழங்கினர். நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகள் ஆகியுள்ளது என்று வெறுமனே கூறிக்கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை என்றும், அதற்கான வளர்ச்சி இங்கு கிட்டவில்லை என்று தெரிவித்தார். சுதந்திரம் அடைந்து 2 ஆண்டுகள் தான் ஆகியுள்ளது என்று நினைத்து கொண்டு பயணித்தால் தான் இலக்கை அடைய முடியும் என்றும் அவர் தெரிவித்தார். அனைவரும் அரசியலுக்கு வாருங்கள் ; சாக்கடையை சுத்தம் செய்ய வேண்டும் என்ற கமல்ஹாசன், அன்றாடம் செய்ய முடியாவிட்டாலும், 5 வருடத்திற்கு ஒருமுறையாவது அரசியலுக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளார்
Category
🗞
News