நாமக்கல் துணை மின் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கணினி மயமாக்கப்பட்ட தானியங்கி மின் தடை பழுதுநீக்கும் மைய திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு துறை அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாமக்கல் மாவட்டத்தில் 6 லட்சத்து 30 ஆயிரம் மின் பயனீட்டாளர்கள் உள்ளனர் என்றும், வீட்டில் அல்லது தெருக்களில் மின் தடை, பாதிப்பு ஏற்பட்டால்1912 என்ற எண்ணில் நேரடியாக அழைக்கலாம் என்றார். பிற இணைப்பாக இருந்தால் 180042519124 என்ற எண்ணில் அழைக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் தொடர்ந்து பேசிய அமைச்சர் தங்கமணி, இதுவரை இரண்டாயிரம் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன என்றும், விழிப்புணர்வு ஏற்படுத்தி டாஸ்மாக் கடைகள் மேலும் படிப்படியாக குறைக்கப்படும் என தெரிவித்தார்
Category
🗞
News