கேரள வெள்ள நிவாரண நிதி திரட்டிய போது காவலரை தாக்கியதாக கடந்த 23 ஆம் தேதி கைது செய்யப்பட்டு கல்லூரி மாணவி வளர்மதி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி நிபந்தனை ஜாமீனில் இன்று விடுதலை செய்யப்பட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வளர்மதி, நிதி திரட்டலில் ஈடுபட்டு கொண்டிருந்த போது சீருடையின்றி இருந்த காவலர் தனக்கு பாலியல் தொந்தரவு செய்ததாகவும், அதனால், பெண்களுக்கு உள்ள தற்காப்பு உரிமையின் அடிப்படையில் அடித்ததாக கூறினார்.
Category
🗞
News