• 7 years ago
புதுவையில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் பரிந்துரையின்றி பா.ஜ.க மாநில தலைவர் சாமி நாதன், பொருளாளர் சங்கர், செல்வகணபதி ஆகியோரை கடந்த ஆண்டு ஜூலை மாதம் நியமன எம்.எல்.ஏ.க்களாக மத்திய அரசு நியமித்தது. மத்திய அரசு நேரடியாக நியமித்த எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் வைத்திலிங்கம் அங்கீகரிக்க மறுத்து விட்டார். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசின் நியமனம் செல்லும் என அதிரடியாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

Category

🗞
News

Recommended