ஆந்திர மாநிலம் ஸ்ரீகாளஸ்தி அடுத்த கொல்லப்பள்ளி வனப்பகுதியில் 50க்கும் மேற்பட்டோர் செம்மரம் வெட்டி கடத்துவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, வனத்துறை அதிகாரிகள் வனப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது செம்மரம் கடத்த வந்தவர்கள் என்று கூறப்படும் நபர்கள், வனத்துறை அதிகாரிகள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. வனத்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும், அவர்கள் தாக்குதலை நிறுத்தாததால், துப்பாக்கியால் சுட்டதாக ஆந்திர போலீசார் தெரிவித்தனர்.
Category
🗞
News