கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் பெய்த மழையால் தமிழக அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக பெரும்பாலான அணைகள் மளமளவென நிரம்பின. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணையும் நிரம்பியுள்ளது. இந்நிலையில் கெலவரப்பள்ளி அணையில் வடமாநிலத்தை சேர்ந்த 3 இளைஞர்கள் செல்பி எடுத்தனர். அப்போது ஒரு இளைஞர் தவறி அணையில் விழுந்தார். இதனைக்கண்ட அங்கிருந்த கல்லூரி மாணவர் ஒருவர் அணையில் விழுந்தவரை காப்பாற்ற தானும் அணையில் குதித்தார். இதில் 2 பேரும் உயிரிழந்தனர். செல்பி எடுத்தப்போது உடனிருந்த மற்ற 2 பேரும் தப்பியோடிவிட்டனர். அவர்கள் யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர். செல்பி மோகத்தால் 2 இளைஞர்கள் அணையில் விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Category
🗞
News