மதுரை அரசு மருத்துவமனையில் முதலாமாண்டு மாணவர்கள் சிலரை சீனியர் மாணவர்கள் ராகிங் செய்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து ராகிங்கில் ஈடுபட்டவர்களை சஸ்பெண்ட் செய்ய இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த மருத்துவக் கல்லூரி முதல்வர் மருதுபாண்டியன், ராகிங் பிரச்னையில் 19 பேர் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், கண்காணிப்பு காமிரா மூலம் தகவல்கள் சேகரிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
Category
🗞
News