திருப்பூரில் பள்ளி மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது மாணவர்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாதது மற்றும் அச்சம் காரணமாக விண்வொளி ஆராய்ச்சி துறையை மாணவர்கள் தேர்ந்தெடுப்பதில்லை என்றார். வரும் காலங்களில் இந்த நிலை மாறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் நிரந்தரமாக வாழ்வதற்கான சூழல் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Category
🗞
News